எஸ்.பி.,அலுவலகத்தில் பழனிசாமி மீது புகார்
விழுப்புரம் : எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமியை கைது செய்ய வலியுறுத்தி, எஸ்.பி., அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு 108 அவசர ஊர்தி தொழிலாளர்கள் முன்னேற்ற சங்க மாவட்ட செயலாளர் ஆனந்த் மற்றும் நிர்வாகிகள், விழுப்புரம் எஸ்.பி., அலுவலகத்தில் மனு அளித்தனர்.
அதில் கூறியிருப்பதாவது:
வேலுார் மாவட்டத்தில் 108 ஆம்புலன்ஸ் ஓட்டுநர் தாக்கப்பட்டதோடு, எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி கொலை மிரட்டலும் விடுத்துள்ளார். ஓட்டுநரை அ.தி.மு.க.,நிர்வாகிகளும் தாக்கி, வாகனத்தை சேதப்படுத்தியுள்ளனர். திருச்சி மாவட்டம், துறையூருக்கு பழனிசாமி, வருவதற்கு முன், மயங்கி விழுந்த அ.தி.மு.க., கட்சிக்காரர் பற்றி தகவலறிந்து வந்த 108 ஆம்புலன்ஸ் ஓட்டுநரையும், உதவியாளரையும் அக்கட்சியினர் தாக்கியுள்ளனர். ஆம்புலன்ஸ் தொழிலாளர்களின் உயிருக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும். கொலை மிரட்டல் விடுத்த எதிர்க்கட்சி தலைவர் மீதும், ஆம்புலன்ஸ் தொழிலாளர்களை தாக்கிய அ.தி.மு.க.,வினரை கைது செய்ய வேண்டும். பழனிசாமி சாலையில் பொதுக்கூட்டம் நடத்த அனுமதி வழங்க கூடாது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.