புகார் பெட்டி
நாய் தொல்லையால் அச்சம்
விழுப்புரம், தேவநாத சுவாமி நகர் பகுதியில் தெரு நாய்களின் தொல்லை அதிகரித்துள்ளது.- சதீஷ், விழுப்புரம் பள்ளிகளுக்கு வாயில் கேட் தேவை
அவலுார்பேட்டையில் உள்ள துவக்கப் பள்ளிகளில் வாயில் கேட் இல்லாததால் இரவில் குடிபிரியர்கள் பள்ளி வளாகத்தில் மது அருந்துகின்றனர்.- சீராளன், அவலுார்பேட்டை கழிவுகள் தேங்கி துர்நாற்றம்
விழுப்புரம், பூந்தோட்டம் பகுதியில் செல்லும் கோலியனுாரான் கால்வாயில் பிளாஸ்டிக் கழிவுகள் அடைத்து துர்நாற்றம் வீசுகிறது.-மோகன், விழுப்புரம். குடிநீர் சீராக கிடைக்குமா?
மேல்மலையனுார் அடுத்த கடப்பனந்தல் மேட்டுத் தெருவில் மேடான பகுதியில் உள்ள வீடுகளுக்கு குடிநீர் சப்ளை கிடைப்பதில்லை.-வெங்கடாசலம், கடப்பனந்தல். இருளில் மூழ்கிய சாலை
மேல்மலையனுார் அடுத்த கோவில்புரையூர் - தோப்பு கிராமத்திற்குச் செல்லும் வழியில் மின் விளக்குகள் இன்றி இரவு நேரங்களில் இருளில் மூழ்கியுள்ளது.- வெங்கட்தாஸ், கோ.தோப்பு.