மேலும் செய்திகள்
புகார் பெட்டி விழுப்புரம்
03-Jul-2025
குண்டும் குழியுமான சாலைகள் விழுப்புரம், மகாராஜபுரம் மகாதேவன் நகருக்கு செல்லும் சாலை குண்டும், குழியுமாக வாகன ஓட்டிகள் பயணிக்க லாயக்கற்ற நிலையில் உள்ளது. - சிரஞ்சிவி, விழுப்புரம். போதை ஆசாமிகள் ரகளை கோலியனுார், கூட்ரோடு அருகே வாகனங்கள் செல்லாமல் உள்ள சாலையில் மது பிரியர்கள் குடிப்பதால் அவ்வழியே இரவில் செல்ல பொதுமக்கள் அச்சப்படுகின்றனர். - சந்தோஷ், கோலியனுார். வீணாக எரியும் தெருவிளக்கு குச்சிப்பாளையத்தில் தெருவிளக்குகள் பகல் நேரங்களிலும் வீணாக எரிவதால் மின்சாரம் வீணாகி வருகிறது. - சூசையப்பன், குச்சிப்பாளையம். போதையில் கூச்சலிடும் இளைஞர்கள் விழுப்புரம் ரயில்வே குடியிருப்பில் குடித்து விட்டு வாகனம் ஓட்டி கூச்சலிட்டு செல்லும் இளைஞர்களால் அங்குள்ள பொதுமக்கள் அச்சப்படுகின்றனர். - செவ்வந்தி, விழுப்புரம்.
03-Jul-2025