உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / மாணவர்களிடையே மோதல்: எஸ்.பி., அறிவுரை வழங்கல்

மாணவர்களிடையே மோதல்: எஸ்.பி., அறிவுரை வழங்கல்

கண்டாச்சிபுரம்; அரசு பள்ளி மாணவர்களிடையே ஏற்பட்ட மோதலைத் தொடர்ந்து பள்ளியில் நேற்று நடந்த நிகழ்ச்சியில் எஸ்.பி., மாணவர்களிடையே அறிவுரை வழங்கி பேசினார்.கண்டாச்சிபுரம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் கண்டாச்சிபுரம், நல்லாப்பாளையம், கடயம், அடுக்கம், பில்ராம்மட்டு உட்பட 10க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து ஏராளமான மாணவர்கள் படித்து வருகின்றனர்.சில ஆண்டுகளாக இப்பள்ளி மாணவர்களுக்கிடையே பள்ளிக்கு வெளியே மோதல் ஏற்பட்டு வந்தது. நேற்று முன்தினம் பள்ளியில் இறுதி வகுப்புகளில் படிக்கும் கண்டாச்சிபுரம் மாணவருக்கும், பில்ராம்பட்டு மாணவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதன் காரணமாக அன்று மாலை இரண்டு தரப்பு மாணவர்களின் ஆதரவாளர்கள் மாணவர்களை தாக்கினர். கண்டாச்சிபுரம் சப் இன்ஸ்பெக்டர் காத்தமுத்து தலைமையிலான போலீசார் சம்மந்தப்பட்ட மாணவர்களின் பெற்றோர்களை அழைத்து விசாரணை நடத்தி எச்சரித்து அனுப்பினார்.இந்நிலையில் நேற்று பள்ளிக்கு சென்ற எஸ்.பி., சரவணன், 9ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களிடையே அறிவுரை வழங்கி பேசினார். அப்போது, மாணவர்கள் படிக்கும் காலத்தில் தேவையற்ற செயல்களில் ஈடுபடாமல் கல்வி மற்றும் விளையாட்டுக்கு முக்கியத்துவம் கொடுக்கும்படி அறிவுறுத்தினார்.பள்ளி தலைமை ஆசிரியர் திருமாவளவன், பள்ளி மேலாண்மைக்குழுத் தலைவர் மாலதி, சப் இன்ஸ்பெக்டர் காத்தமுத்து, உதவி தலைமை ஆசிரியர் குணசீலன் உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை