உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / திண்டிவனம் நகர தி.மு.க.,வினர் மாவட்ட செயலாளருக்கு வாழ்த்து

திண்டிவனம் நகர தி.மு.க.,வினர் மாவட்ட செயலாளருக்கு வாழ்த்து

திண்டிவனம், ஜூன் 1-விழுப்புரம் வடக்கு மாவட்ட தி.மு.க., செயலாளர் மஸ்தான் பிறந்த நாளுக்கு, திண்டிவனம் நகர தி.மு.க., வினர் வாழ்த்து தெரிவித்தனர். விழுப்புரம் வடக்கு மாவட்ட தி.மு.க.,செயலாளரும், முன்னாள் அமைச்சருமான மஸ்தான் பிறந்த நாள் விழா செஞ்சியில் நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி, திண்டிவனம் நகர தி.மு.க., செயலாளர் கண்ணன் தலைமையில், அவரது இல்லத்திற்கு சென்ற நிர்வாகிகள் மாவட்ட செயலாளருக்கு சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர். இதில், மயிலம் ஒன்றிய தி.மு.க., செயலாளர் மணிமாறன், விழுப்புரம் வடக்கு மாவட்ட வர்த்தர் அணி துணை தலைவர் ஆடிட்டர் பிரகாஷ், மாவட்ட மருத்துவர் அணி துணை தலைவர் சூர்யபிரகாஷ், மாவட்ட அயலக அணி துணை தலைவர் முஸ்தபா, தொழிலாளர் அணி சுரேஷ், நிர்வாகிகள் ஜாபர்சேட், அக்பர்பேக் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ