எம்.எல்.ஏ.,வுக்கு வாழ்த்து
விழுப்புரம்: விழுப்புரம் எம்.எல்.ஏ., லட்சுமணனுக்கு கட்சியினர் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்தனர்.விழுப்பும் தொகுதி எம்.எல்.ஏ., லட்சுமணன் பிறந்த நாள் விழா விழுப்புரத்தில் நடந்தது. நகர செயலாளர் சக்கரை, நகர மன்ற தலைவர் தமிழ்ச்செல்வி பிரபு, முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் வளவனுார் மணி ராஜரத்தினம், புஷ்பராஜ், கோலியனுார் ஒன்றிய செயலாளர் மும்மூர்த்தி.முன்னாள் சேர்மன்கள் கோலியனுார் குப்புசாமி, வானுார் சிவா ஆகியோர் சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர்.கோலியனுார் ஒன்றிய ம.தி.மு.க., செயலாளர் சுதேசி ராஜா, பிடாகம் கிளைச் செயலாளர் ரவி, மாவட்ட விவசாய அணி துணைச் செயலாளர் கேசவன், விவசாய தொழிலாளர் அணி துணை அமைப்பாளர் தவமணி, மாவட்ட கவுன்சிர் ஹரிராமன், ஆகியோரும் வாழ்த்து தெரிவித்தனர்.