உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / மத்திய அரசை கண்டித்து காங்., ஆர்ப்பாட்டம்

மத்திய அரசை கண்டித்து காங்., ஆர்ப்பாட்டம்

விழுப்புரம்; மத்திய அரசை கண்டித்து விழுப்புரம் மத்திய மாவட்ட காங்., சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.விழுப்புரம் நகராட்சி திடலில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு, மாவட்ட தலைவர் சீனுவாசகுமார் தலைமை தாங்கினார். நகர தலைவர் செல்வராஜ் வரவேற்றார். மாநில நிரந்தர அழைப்பாளர் பாலசுப்ரமணியம், பொதுக்குழு நாராயணசாமி, ராஜ்குமார், மாவட்ட பொது செயலாளர்கள் விஸ்வநாதன், பாரிபாபு, சிவக்குமார் கண்டன உரையாற்றினர்.இளைஞர் காங்., தலைவர் ஸ்ரீராம், எஸ்.சி., பிரிவு மாவட்ட தலைவர் சேகர், வட்டார தலைவர்கள் ராதா, கிருஷ்ணநந்தன், ஓ.பி.சி., பிரிவு துணை தலைவர் சரவணன், மகிளா காங்., ஸ்டெல்லா உட்பட நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.ஆர்ப்பாட்டத்தில், இந்தி திணிப்பு, மும்மொழி கொள்கை, தமிழகத்தில் பள்ளிக்கல்விக்கு நிதி ஒதுக்காதது மற்றும் தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்திற்கு நிதி ஒதுக்காமல் உள்ள மத்திய பா.ஜ., அரசை கண்டித்து பேசினர். இளைஞர் காங்., விழுப்புரம் தொகுதி தலைவர் பிரபாகரன் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !