உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / காங்., மாநில தலைவர் நிவாரணம் வழங்கல்

காங்., மாநில தலைவர் நிவாரணம் வழங்கல்

வானுார் : கொஞ்சிமங்கலம் கிராமத்தில் மழை, வெள்ளத்தால் பாதித்தவர்களுக்கு காங்., மாநில தலைவர் நிவாரண பொருட்கள் வழங்கினார்.கிளியனுார் அடுத்த கொஞ்சிமங்கலம் கிராமத்தில், மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதியை நேற்று காங்., மாநில தலைவர் செல்வபெருந்தகை பார்வையிட்டு, அப்பகுதி மக்களுக்கு ஆறுதல் கூறினார்.தொடர்ந்து, அப்பகுதி மக்களுக்கு வெள்ள நிவாரண பொருட்களை, வழங்கினார். நிகழ்ச்சியில் மாநில துணைத் தலைவர் ரங்கபூபதி, ஊராட்சி தலைவர் வேலு, துணைத் தலைவர் முனுசாமி, தமிழ்நாடு காங்., பொதுச்செயலாளர் செல்வம், மாநில துணைத் தலைவர் குலாம்மொய்தீன், எஸ்.சி., பிரிவு மாவட்ட தலைவர் ராமமூர்த்தி, ஓ.பி.சி., அணி தலைவர் கோவிந்தன் மற்றும் நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி