உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / கட்டுமானம் மற்றும் மனை தொழில் கூட்டமைப்பு ஆலோசனைக் கூட்டம்

கட்டுமானம் மற்றும் மனை தொழில் கூட்டமைப்பு ஆலோசனைக் கூட்டம்

விழுப்புரம்: விழுப்புரத்தில் கட்டுமானம் மற்றும் மனை தொழில் கூட்டமைப்பு மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. விழுப்புரம் மாவட்ட தலைவர் அண்ணாதுரை தலைமை தாங்கினார். கவுரவ தலைவர் மோகன்ராஜ், மாவட்ட செயலாளர்கள் செல்வராஜ், அன்பழகன், பிரகாஷ், பொருளாளர் வெங்கடேசன், துணைச் செயலாளர்கள் முரளி கிருஷ்ணா, சிவக்குமார் முன்னிலை வகித்தனர். செய்தி தொடர்பாளர் டேவிட் அலெக்சாண்டர் வரவேற்றார். கூட்டத்திற்கு, மாநில தலைவர் செந்தமிழ்கொற்றவன், மண்டல தலைவர் முருகேசன், மண்டல செயலாளர் செந்தில்வேல் ஆகியோர் சிறப்புரையாற்றினர். கூட்டத்தில், தமிழகத்தில் கட்டுமான பொருட்கள் விலையேற்றத்தை அரசு தடுக்க வேண்டும். நத்தம் நிலத்திற்கான பட்டா ஆன்லைனில் வராததால், பத்திர பதிவு செய்வதில் ஏழை, எளிய மக்கள் மிகவும் சிரமப்படுவதால், இதனை அந்தந்த மாவட்ட ஆட்சியர் மற்றும் முதல்வர் கவனத்திற்கு கொண்டு சென்று நடவடிக்கை எடுக்க வேண்டும். அனைத்து கூலி தொழிலாளர்களையும், கட்டுமான தொழிலாளர் நலவாரிய உறுப்பினர்களாக பதிவு செய்ய வேண்டும், மணல் குவாரிகளை அரசு உடனடியாக திறக்க வேண்டும் என்பது உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை