உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / விக்கிரவாண்டியில் மாவட்ட விளையாட்டு அரங்கம் கட்டும் பணி கிடப்பில் உள்ளது; கலெக்டர் நடவடிக்கை தேவை

விக்கிரவாண்டியில் மாவட்ட விளையாட்டு அரங்கம் கட்டும் பணி கிடப்பில் உள்ளது; கலெக்டர் நடவடிக்கை தேவை

விக்கிரவாண்டி : விக்கிரவாண்டியில் மாவட்ட விளையாட்டு அரங்கம் கட்ட இடம் தேர்வு செய்து பணி கிடப்பில் போடப்பட்டுள்ளது.தமிழகம் தோறும் மாவட்ட விளையாட்டு அரங்கம் அமைக்கப்படும் என தமிழ்நாடு முதலமைச்சர் உத்திரவிட்டதின் கடந்த 2022 ம் ஆண்டு டிசம்பர் மாதம் அப்போதைய மாவட்ட கலெக்டர் மோகன் தலைமையில் அரசு அதிகாரிகள் விக்கிரவாண்டி டோல்கேட் அருகில் வி.சாத்தனுார் எல்லையில் 20 ஏக்கர் பரப்பளவில் இடத்தை பார்வையிட்டு தேர்வு செய்தனர் .பணிகள் விரைந்து தொடங்க மாநில தலைமை செயலாளருக்கு அறிக்கை அனுப்பி வைத்தனர் . இடம் தேர்வு செய்து இரண்டாண்டுகள் ஆகி உள்ள நிலையில் விளையாட்டு அரங்கிற்கான பணி துவங்காதது விளையாட்டு வீரர்கள் மத்தியில் பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.விக்கிரவாண்டி தொகுதியிலுள்ள இளம் வீரர்கள் பயனடையும் வகையில் கிடப்பில் போடப்பட்ட மாவட்ட விளையாட்டு அரங்க பணியை மீண்டும் தொடங்கிட மாவட்ட அமைச்சர், மாவட்ட கலெக்டர் ஆகியோர் தலையிட வேண்டுமென விளையாட்டு வீரர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !