உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / வாக்காளர் பட்டியல் திருத்த பணி: கட்சியினருடன் ஆலோசனை

வாக்காளர் பட்டியல் திருத்த பணி: கட்சியினருடன் ஆலோசனை

விக்கிரவாண்டி: விக்கிரவாண்டி தொகுதியில் வாக்காளர் பட்டியல் திருத்த பணி குறித்து கட்சி பிரதிநிதிகளுடனான ஆலோசனைக் கூட்டம் நடந்தது. தாலுகா அலுவலகத்தில் நடந்த கூட்டத்திற்கு, மாவட்ட வழங்கல் அலுவலர் சந்திரசேகரன் தலைமை தாங்கினார். தாசில்தார் செல்வமூர்த்தி முன்னிலை வகித்தார். தேர்தல் தனி தாசில்தார் பாரதிதாசன் வரவேற்றார். கூட்டத்தில் இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவுப்படி வாக்காளர் பட்டியலில் தீவிர சிறப்பு திருத்தமாக ஒரு வாக்காளர் தொடர்ச்சியான இடமாற்றம். இதனால் ஒரே வாக்காளர் பல இடங்களில் பதிவு செய்திருத்தல். இறந்த வாக்காளர் பெயர்களை பட்டியலில் இருந்து நீக்காமல் இருத்தல். வெளிநாட்டில் வசிப்பவர்களை தவறாக சேர்த்தல் போன்ற சிறப்பு சீர்திருத்தங்கள் நடைபெறுவது குறித்து கட்சி பிரதிநிதிகளிடையே ஆலோசனை வழங்கப்பட்டது. தனி தாசில்தார் வேல்முருகன், தேர்தல் உதவியாளர் உஷா, மாவட்ட சேர்மன் ஜெயச்சந்திரன், பேரூராட்சி சேர்மன் அப்துல் சலாம், அ.தி.மு.க., முன்னாள் எம்.எல்.ஏ., முத்தமிழ்ச் செல்வன். நகர செயலாளர் பூர்ணராவ், நகர காங்., தலைவர் குமார், இந்திய கம்யூ., வட்டச் செயலாளர் பாலசுப்ரமணியன், தே.மு.தி.க., மாவட்ட துணைச் செயலாளர் சூடாமணி, ஒன்றிய செயலாளர் ஜெயமூர்த்தி, நகர செயலாளர் செல்வம், வி.சி., உள்ளிட்ட பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த கட்சி பிரதிநிதிகள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை