உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / பஸ்சில் கூடுதல் கட்டணம் வசூலித்த விவகாரம்; நுகர்வோர் குறை தீர்வு ஆணையம் அபராதம் விதிப்பு

பஸ்சில் கூடுதல் கட்டணம் வசூலித்த விவகாரம்; நுகர்வோர் குறை தீர்வு ஆணையம் அபராதம் விதிப்பு

கண்டமங்கலம் : விழுப்புரம்-புதுச்சேரி மார்க்கத்தில் அரசு மற்றும் தனியார் பஸ்களில் கூடுதல் கட்டணம் வசூலித்ததற்காக, நுகர்வோர் குறை தீர்வு ஆணையம் அபராதம் விதித்து தீர்ப்பு கூறியுள்ளது.விழுப்புரம்-நாகப்பட்டினம் நான்கு வழிச்சாலையில் கண்டமங்கலம் ரயில்வே மேம்பாலம் கட்டுமான பணி காரணமாக, கடந்த பிப்ரவரி மாதம் முதல், புதுச்சேரி மார்க்க வாகனங்கள் மதகடிப்பட்டு மற்றும் சின்னபாபுசமுத்திரம் வழியாகவும், விழுப்புரம் மார்க்க வாகனங்கள் அரியூர், கீழூர் வழியாகவும் திருப்பி விடப்பட்டன.இதனால் 5 முதல் 10 கி.மீ., தொலைவிற்கு சுற்றி செல்ல வேண்டி இருந்ததால் கூடுதல் எரிபொருள் செலவினம் காரணமாக, பஸ்களில் விழுப்புரம் - புதுச்சேரிக்கு ரூ.27ல் இருந்து ரூ.32 ரூபாயாக உயர்த்தி வசூலிக்கப்பட்டது.இதனை எதிர்த்து கண்டமங்கலத்தை சேர்ந்த சிவசுப்ரமணியன் விழுப்புரம் மாவட்ட குறைதீர்வு ஆணையத்தில், வழக்கு தொடர்ந்தார். அதில், அரியூரில் இருந்து விழுப்புரத்திற்கு அரசு பஸ்சில் ரூ.20க்கு பதிலாக ரூ.26, தனியார் பஸ்களில் ரூ.20க்கு பதிலாக ரூ.28 வசூலித்ததாக கூறி இருந்தார்.இந்த வழக்கை விசாரித்த மாவட்ட குறை தீர்வு ஆணைய தலைவர் டி. சந்தோஷ்குமார், உறுப்பினர்கள் எஸ்.எம் மீராமொய்தீன், கே.அமலா ஆகியோர் வழங்கிய தீர்ப்பில் கூறியிருப்பதாவது.முறையீட்டாளரிடமிருந்து அதிகமாக வசூலித்த கட்டணத்தை, திருப்பி அளிக்க வேண்டும். நேர்மையற்ற வணிக நடைமுறையினாலும், முறையீட்டாளருக்கு ஏற்பட்ட மன உளைச்சலுக்கும் அலைச்சலுக்கும் இழப்பீடாக ரூ.12 ஆயிரம், வழக்கு செலவு தொகையாக ரூ.10 ஆயிரம் வழங்க வேண்டும்.மேலும், எண்ணிலடங்கா நுகர்வோர்களிடமிருந்து அதிகப்படியாக பயண கட்டணம் வசூலித்ததற்காகவும், மீண்டும் இந்நிலை தொடரக்கூடாது என்பதற்காகவும், ரூ.50 ஆயிரத்தை மாவட்ட நுகர்வோர் குறை தீர்வு ஆணையத்திற்கு செலுத்த வேண்டும் என உத்தரவிட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ