உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / வளர்ச்சிக்கான ஒருங்கிணைப்பு கண்காணிப்பு குழுக்கூட்டம்

வளர்ச்சிக்கான ஒருங்கிணைப்பு கண்காணிப்பு குழுக்கூட்டம்

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அலுவலக கூட்டரங்கில், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை சார்பில் மாவட்ட வளர்ச்சிக்கான ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழுக்கூட்டம் நடந்தது. மாவட்ட வளர்ச்சிக்கான ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு தலைவர் ரவிக்குமார் எம்.பி., தலைமை தாங்கினார். கலெக்டர் ஷேக் அப்துல் ரஹ்மான், உளுந்துார்பேட்டை மணிக்கண்ணன் எம்.எல்.ஏ., முன்னிலை வகித்தனர். இதில், நுாறு நாள் வேலை திட்டம், பிரதமரின் குடியிருப்பு திட்டம், ஜன்ஜாதி ஆதிவாசி நியாயமகா அபியான் திட்டம், துாய்மை பாரத இயக்கம், தேசிய சுகாதார இயக்கம், தேசிய பயிர் காப்பீட்டு திட்டம், தேசிய நுண்ணீர் பாசனத் திட்டம், தோட்டக்கலை திட்டப்பணிகள், தேசிய கால்நடை நோய் கட்டுப்பாட்டுத் திட்டம், பொதுப்பணித்துறை - கீழ்பெண்ணையாறு வடிநில கோட்டம் திட்டப்பணிகள், தேசிய நெடுஞ்சாலை மற்றும் மாநில நெடுஞ்சாலை திட்டப்பணிகள் உள்ளிட்ட பல்வேறு திட்டப்பணிகள் குறித்து ரவிக்குமார் எம்.பி., கேட்டறிந்தார். மாவட்டத்தில் அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டம் மற்றும் பி.எம்.ஜன்மன் திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு வீடுகள் ஒதுக்கீடு செய்து நிறைவுபெற்றுள்ள பணிகளின் விவரம் மற்றும் புதிய தகுதியான பயனாளிகள் தேர்வுப்பட்டியல் விவரம் குறித்து கேட்டறியப்பட்டது. அப்போது, கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி) பத்மஜா, ஊரக வளர்ச்சித்துறை செயற்பொறியாளர் கண்ணன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை