வரி உயர்வு குறித்து அதிகாரிகள் தெரிவிக்கவில்லை; கவுன்சிலர்கள் குற்றச்சாட்டு
திண்டிவனம் : திண்டிவனம் நகர்மன்ற கூட்டத்தில், குப்பைகள், கால்வாய்களை சுத்தப்படுத்த வேண்டும் என்று கவுன்சிலர்கள் கோரிக்கை விடுத்தனர்.திண்டிவனம் நகர மன்ற கூட்டம், நகர மன்ற தலைவர் நிர்மலா ரவிச்சந்திரன் தலைமையில் நடந்தது.கூட்டத்தில் துணைத் தலைவர் ராஜலட்சுமி வெற்றிவேல், நகராட்சி கமிஷனர் குமரன் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர்.கூட்டத்தில் பங்கேற்ற கவுன்சிலர்கள் நகராட்சி பகுதியில் தேங்கியுள்ள குப்கைளை அகற்ற வேண்டும், அடைப்பு ஏற்பட்டுள்ள கால்வாய்களை சுத்தப்படுத்த வேண்டும்.நகர பகுதியில் எரியாமல் உள்ள எல்.இ.டி., விளக்குளை சரியாக பராமரித்து, இரவு நேரத்தில் எரிய செய்வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.வரி உயர்வு குறித்து அதிகாரிகள் கவுன்சிலர்களுக்கு முறையாக தகவல்தெரிவிக்கவில்லை என்றும், வரி உயர்வு பொது மக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது எனவும் குற்றம் சாட்டி பேசினார்.