உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / பைக் விபத்தில் தம்பதி படுகாயம்

பைக் விபத்தில் தம்பதி படுகாயம்

செஞ்சி: மொபட் மீது பைக் மோதிய விபத்தில் தம்பதி படுகாயம் அடைந்தனர். செஞ்சி அடுத்த கடம்பூர் கிராமத்தை சேர்ந்தவர் மணி, 60; இவரது மனைவி காந்தாமணி, 55; இருவரும் கடந்த 22ம் தேதி மாலை மொபட்டில் செஞ்சிக்கு வந்தனர். களையூர் கூட்ரோடு அருகே வந்தபோது, பின்னால் வந்த மோட்டார் பைக், மொபட் மீது மோதியது. இதில் மணி, காந்தாமணி இருவரும் படுகாயம் அடைந்தனர். இருவரும் சென்னை அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். விபத்து குறித்து செஞ்சி போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை