உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / கிணற்றில் விழுந்த பசுமாடு, ஆடு மீட்பு

கிணற்றில் விழுந்த பசுமாடு, ஆடு மீட்பு

திருவெண்ணெய்நல்லுார்; திருவெண்ணெய்நல்லுார் அருகே கிணற்றில் விழுந்த பசுமாடு, ஆடு உயிருடன் மீட்கப்பட்டது. வளையாம்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் தண்டபாணி, 55; இவரது பசு மாட்டை அதே பகுதியில் உள்ள விவசாய நிலத்தில் மேய்ச்சலுக்காக கட்டி வைத்திருந்தார். அப்போது பசு மாடு, 30 அடி ஆழ விவசாய கிணற்றில் தவறி விழுந்தது. அதைப்பார்த்த தண்டபாணி, திருவெண்ணெய்நல்லூர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தார். நிலைய அலுவலர் கோபால் தலைமையிலான தீயணைப்பு துறையினர் கிணற்றில் விழுந்த பசுமாட்டை கயிறை கட்டி உயிருடன் மீட்டனர். இதேபோல ஏமப்பூர் கிராமத்தை சேர்ந்த பூவரசன், 30; என்பவருக்கு சொந்தமான ஆடு, மேய்ச்சலுக்காக ஓட்டி சென்றபோது அதே பகுதியில் உள்ள விவசாய கிணற்றில் தவறி விழுந்தது. தகவலறிந்த தீயணைப்பு நிலைய வீரர்கள் சம்பவ இடத்திற்கு சென்று ஆடை உயிருடன் மீட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை