கிரிக்கெட் போட்டி பரிசளிப்பு விழா
திண்டிவனம்: திண்டிவனம் அருகே நடுவனந்தல் கிராமத்தில் நடந்த கிரிக்கெட் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா நடந்தது. மயிலம் ஒன்றியம், நடுவனந்தல் கிராமத்தில் துணை முதல்வர் உதயநிதி பிறந்த நாளை முன்னிட்டு, கிரிக்கெட் போட்டி நடந்தது. இதில் திண்டிவனம், அகூர், தையூர், நெற்குணம், வெண்மணி ஆத்துார், ஔவையார்குப்பம், பூதேரி உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த அணிகள் பங்கேற்றன. இதில் முதல் மற்றும் இரண்டாம் இடம் பிடித்த அணிகளுக்கு, தலைமை தீர்மானக்குழு உறுப்பினர் சிவா பரிசு வழங்கினார். மாவட்ட அவைத் தலைவர் சேகர், கவுன்சிலர் குமரேசன், இளைஞரணி நிர்மல்குமார் உட்பட பலர் பங்கேற்றனர்.