உள்ளூர் செய்திகள்

கிரைம் செய்திகள்...

பிளஸ் 2 மாணவர் தற்கொலை

விழுப்புரம் அடுத்த அகரம் சித்தாமூரைச் சேர்ந்தவர் தங்கராஜ் மகன் புகழேந்தி, 16; பிளஸ் 2 படித்து வந்தார். இவர் வயிற்று வலியால் மாத்திரை சாப்பிட்டு வந்தார். நேற்று வலி அதிகமானதால் மனமுடைந்த அவர், தனது வீட்டில் துாக்கு போட்டு தற்கொலைக்கு முயன்றார். உடன், அவர் மீட்கப்பட்டு விழுப்புரம் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் புகழேந்தி இறந்தார். காணை போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

2 பேரை தாக்கியவர் கைது

விழுப்புரம் அடுத்த கருங்காலிப்பட்டைச் சேர்ந்தவர் வடிவேல், 60; இவர், தனது மருமகன் அண்ணாமலை, 42; என்பவருடன் அதே பகுதியைச் சேர்ந்த வேணுகோபால் சவுக்கு தோப்பில் ஈசல் பிடிக்கச் சென்றார். அப்போது, அதே பகுதியை சேர்ந்த வேளாங்கண்ணி, 49; என்பவர், இருவரிடமும் இங்கு ஏன் அமர்ந்துள்ளீர்கள் என கேட்டு திட்டி, தாக்கினார். காணை போலீசார் வழக்குப் பதிந்து வேளாங்கண்ணியை கைது செய்தனர்.

இரு தரப்பு மோதல்: 6 பேர் மீது வழக்கு

விழுப்புரம் அடுத்த சோழகனுாரைச் சேர்ந்தவர் வினோத், 30; இவரது பெரியப்பா ஆறுமுகம், 65; இருவரின் குடும்பத்தினருக்கும் இடையே வீட்டுமனை தொடர்பாக கடந்த 23ம் தேதி தகராறு ஏற்பட்டது. இதில், இரு தரப்பினரும் திட்டி, தாக்கிக் கொண்டனர். இருதரப்பு புகாரின் பேரில், வினோத், ஆறுமுகம் உட்பட 6 பேர் மீது காணை போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.

கஞ்சா கடத்திய 3 பேர் கைது

செஞ்சி மதுவிலக்கு இன்ஸ்பெக்டர் பாலமுரளி, சப் இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் மற்றும் போலீசார் நேற்று காலை திண்டிவனம் சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக ஒரே பைக்கில் வந்த செஞ்சியைச் சேர்ந்த லாரன்ஸ் மகன் முருகன், 20; உத்திரகுமார் மகன் ராதா, 21; ராஜாம்புலியூரைச் சேர்ந்த கதிரவன், 41; ஆகிய 3 பேரும் 80 கிராம் கஞ்சா கடத்தி வந்தது தெரியவந்தது. உடன் 3 பேரையும் கைது செய்து பைக் மற்றும் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !