மேலும் செய்திகள்
மகள் மாயம் தந்தை புகார்
13-Sep-2025
கார் மீது பைக் மோதி வாலிபர் பலி கண்டாச்சிபுரம் அடுத்த கீழக்கொண்டூர் கோவிந்தராஜ், 37; இவர் நேற்று முன்தினம் திருக்கோவிலுார் - மடப்பட்டு சாலை வழியாக பைக்கில் சென்றார். மாதம்பட்டு ஆஞ்சநேயர் கோவில் அருகே, பைக் நிலை தடுமாறி முன்னால் சென்ற எட்டியாஸ் கார் மீது மோதியதில் கோவிந்தராஜ் சம்பவ இடத்திலேயே இறந்தார். திருவெண்ணெய்நல்லுார் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர். கூலித் தொழிலாளி சாவு திண்டிவனம், காவேரிப்பாக்கம, நாகராஜ், 55; கூலித்தொழிலாளி. இவர் நேற்று முன்தினம் காலை வேலைக்குச் செல்வதாக கூறிவிட்டு சென்றவர் வீடு திரும்பவில்லை. இந்நிலையில், சென்னை - திருச்சி சாலையிலுள்ள சிறிய பாலத்தின் அடியில் செல்லும் ஓடையில் நாகராஜ் இறந்து கிடந்தார். திண்டிவனம் டவுன் போலீசார், உடலை கைப்பற்றி நாகராஜ் இறந்ததற்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர். குட்கா விற்றவர் கைது விழுப்புரம் தாலுகா இன்ஸ்பெக்டர் செல்வநாயகம், விராட்டிக்குப்பம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டார். அப்போது, அதே பகுதியை சேர்ந்த ராஜபிரகாஷ், 44; என்பவர் தனது பங்க் கடையில் குட்கா பொருட்கள் விற்பனை செய்தது தெரியவந்தது. அவர் மீது வழக்குப் பதிந்து கைது செய்தனர். மனைவி மாயம்: கணவர் புகார் அனந்தபுரம் அடுத்த வெள்ளையாம்பட்டு குப்புசாமி மனைவி முனியம்மாள், 65; மனநலம் பாதிக்கப்பட்டவர். கடந்த 18ம் தேதி வீட்டிலிருந்து வெளியே சென்ற முனியம்மாள் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்க வில்லை. குப்புசாமி அளித்த புகாரின் பேரில், அனந்தபுரம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர். தட்டிக்கேட்டவர் மீது தாக்குதல் வளவனுார் அடுத்த சொர்ணாவூர் கீழ்பாதி வீரமுத்து மகன் ஸ்டாலின், 24; இவர், கடந்த 21ம் தேதி, தனது வீட்டின் அருகே நடந்து சென்றார். அப்போது, பைக்கில் அதிவேகமாக அதே பகுதியை சேர்ந்த காந்தி, சந்தானம், பிரபாகரன் ஆகியோர் சென்றனர். இதனை ஸ்டாலின் தட்டிக்கேட்டதால் ஆத்திரமடைந்த மூவரும் ஸ்டாலின் மற்றும் அவரது நண்பரான நித்யானந்தம் ஆகியோரை தாக்கினர். புகாரின் பேரில், காந்தி உட்பட 3 பேர் மீது வளவனுார் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர். மாணவி மாயம்: போலீஸ் விசாரணை பரசுரெட்டிப்பளையம் புருஷோத்தமன் மகள் சுதாஷினி, 20; விழுப்புரம் அரசு கலை கல்லுாரியில் படித்து வருகிறார். கடந்த 24ம் தேதி வீட்டிலிருந்து வெளியே சென்றவர், வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. புகாரின் பேரில், வளவனுார் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர். தொழலாளியை தாக்கியவர் மீது வழக்கு விழுப்புரம், சேவியர் காலனியைச் சேர்ந்தவர் ஜோசப் ராஜ், 32; கூலித் தொழிலாளி. இவர், விழுப்புரம் ரயில் நிலையம் அருகில் உள்ள கடையில் தண்ணீர் பாட்டில் வாங்க சென்றார். அப்போது, அங்கிருந்த அடையாளம் தெரியாத 30 வயது நபர், தகராறு செய்து ஜேசப் ராஜை திட்டி, தாக்கினார். விழுப்புரம் டவுன் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.
13-Sep-2025