மேலும் செய்திகள்
மணல் கடத்திய மூவருக்கு வலை
06-Oct-2025
மணல் கடத்தியவர் மீது வழக்கு காணை சப் இன்ஸ்பெக்டர் நடராஜன் மற்றும் போலீசார், நேற்று காலை தெளி கிராமத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, தென்பெண்ணை ஆறு அருகே மினி லாரியில் மணல் கடத்தி வந்த அதே பகுதியைச் சேர்ந்த வேலாயுதம், 35; மீது, வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர். குட்கா விற்றவர் கைது கோனுார் பகுதியில், காணை சப் இன்ஸ்பெக்டர் சிவானந்தகுமார் மற்றும் போலீசார், ரோந்து சென்றனர். அப்போது, அங்கு ள்ள பெட்டிக் கடையில் குட்கா பாக்கெட்டுகள் விற்றது தெரியவந்தது. இதனையடுத்து, குட்கா விற்ற அதே பகுதியைச் சேர்ந்த கருப்புசாமி, 52; என்ப வரை போலீசார் கைது செய்து, 308 குட்காவை பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர். மது பாட்டில் விற்றவர் கைது திருவெண்ணெய்நல்லுார் இன்ஸ்பெக்டர் அழகிரி மற்றும் போலீசார் சி.மெய்யூர் பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அப்பகுதியில் மதுபாட்டில் விற்ற அதே பகுதியை ச் சேர்ந்த அழகுநாதன் மகன் கனகராஜ், 22; என் பவரை கைது செய்து 13 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர். மகள் மாயம்: தாய் புகார் அசாம் மாநிலத்தைச் சேர்ந்தவர் ராகுல்உசேன். இவரது மனைவி செண்பகம், 21; காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு இரண்டரை வயதில் பெண் குழந்தை உள்ளது. கடந்த சில மாதங்களாக குழந்தையுடன் தாய் வீட்டில் வசித்து வந்த செண்பகத்தை கடந்த 7ம் தேதி காலை முதல் குழந்தைதயுடன் காணவில்லை. இதுகுறித்து செண்பகத்தின் தாய் மல்லிகா அளித்த புகாரின் பேரில் திருவெண்ணெய்நல்லுார் போலீசார் விசாரிக்கின்றனர். மது பாட்டில் கடத்தியவர் கைது திண்டிவனம் அடுத்த பெரும்பாக்கம் மதுவிலக்கு சோதனைச் சாவடியில் போலீசார் நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, அவ்வழியாக பைக்கில் மதுபாட்டில் கடத்தி வந்த வந்தவாசி அடுத்த பெரியகோரகொட்டாயை சேர்ந்த சுப்ரமணி மகன் மணிகண்டன், 21; என்பவரை கைது செய்து, 8 புதுச்சேரி மாநில மதுபாட்டில்கள் மற்றும் பைக்கையும் பறிமுதல் செய்தனர். மணல் கடத்திய 5 பேர் கைது திருவெண்ணெய்நல்லுார் இன்ஸ்பெக்டர் அழகிரி மற்றும் போலீசார் நேற்று அதிகாலை 6:00 மணியளவில் மலட்டாறில் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு கடத்திய மழையம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த பழனிசாமி மகன் ஜெகன், 32; திருவெண்ணெய்நல்லுார் லட்சுமணன், 40; உட்பட 5 பேரை கைது செய்து மணல் கடத்தலுக்கு பயன்படுத்திய 5 பைக்குகளை பறிமுதல் செய்தனர். இளம்பெண் தற்கொலை சிறுவங்கூர், சமத்துவபுரத்தைச் சேர்ந்தவர் ரங்கநாதன் மகள் காஞ்சனா, 23; கடந்த 8ம் தேதி இவரது தாய் சரசுக்கும், அங்கு வசிக்கும் சங்கருக்கும் இடையே வீட்டின் வாசலில் மண் கொட்டியது தொடர்பாக தகராறு ஏற்பட்டது. சண்டை வேண்டாம் என தனது தாயிடம் கூறி சமாதனம் செய்ய முயன்ற காஞ்சனாவை, அவரது தாய் சரசு வீட்டிற்குள் வைத்து கதவை பூட்டியுள்ளார். 10 நிமிடம் கழித்து மீண்டும் கதவை திறந்து பார்த்தபோது காஞ்சனா துாக்கு போட்டுக் கொண்டது தெரியவந்தது. உடன், அவரை மீட்டு சேலம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்றவர் நேற்று முன்தினம் இறந்தார். மொபைல் போன் திருடியவர் கைது ரிஷிவந்தியம் பகுதியைச் சேர்ந்தவர் மணி மகன் சிவா, 24; அரசு பஸ் கண்டக்டர் நேற்று முன்தினம் மதியம் பணிமனையில் தனது மொபைல் போனுக்கு சார்ஜ் போட்டுள்ளார். அப்போது வாலிபர் ஒருவர் திடீரென மொபைல் போனினை திருட முயன்றார். உடன் சிவா உள்ளிட்ட ஊழியர்கள் அவரை பிடித்து கள்ளக்குறிச்சி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். விசாரணையில் சங்கராபுரம் அடுத்த அம்மாபாளையம் வீரப்பன் மகன் சுபாஷ், 30; என தெரியவந்தது. உடன் வழக்குப்பதிந்து அவரை கைது செய்தனர். மூதாட்டி மாயம் சின்னசேலம் அடுத்த இந்திலி கிராமத்தைச் சேர்ந்த ராமசாமி மனைவி பாவாயி, 75; இவரை கடந்த 12ம் தேதி முதல் காணவில்லை. இதுகுறித்து அவரது மகன் ராஜீ கொடுத்த புகாரின் பேரில் கள்ளக்குறிச்சி போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர். கால்வாயில் இறந்தவர் உடல் மீட்பு சங்கராபுரம் அடுத்த அரசம்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் ரவிக்குமார், 47; இவர், நேற்று காலை பூட்டை ஏரி அருகே உள்ள நிலத்திற்கு சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. இந்நிலையில், கவின் நகர் அருகே உள்ள கழிவுநீர் கால்வாயில் இறந்து கிடந்தது தெரியவந்தது. சங்கராபுரம் போலீசார் உடலை மீட்டு வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர். வாலிபரை மிரட்டியவர் மீது வழக்கு மூங்கில்துறைப்பட்டு அடுத்த ராவத்தநல்லுார் கிராமத்தைச் சேர்ந்தவர் முத்துவேல், 31; புதுப்பட்டு பெட்ரோல் பங்க் ஊழியர். புதுப்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி, 28; இவர், தனது பைக்கிற்கு காற்று அடிக்கும்படிகூறினார். அதற்கு மிஷின் ரிப்பேர் என்று கூறியதால் ஆத்திரமடைந்த கிருஷ்ணமூர்த்தி ஆபாசமாக பேசி கொலை மிரட்டல் விடுத்தார். முத்துவேல் அளித்த புகாரின் பேரில், வட பொன்பரப்பி போலீசார், கிருஷ்ணமூர்த்தி மீது வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர். பெண் மாயம்: போலீஸ் விசாரணை கள்ளக்குறிச்சி, புத்துமாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த குமார் மனைவி மணிமேகலை, 36; கருத்து வேறுபாடு காரணமாக கணவரை பிரிந்து இரு பிள்ளைகளுடன் பெற்றோர் வீட்டில் வசித்து வருகிறார். இவரை கடந்த மாதம் 28ம் தேதி முதல் காணவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. அவரது தந்தை சிவக்குமார் கொடுத்த புகாரின் பேரில் கள்ளக்குறிச்சி போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர். பாறை கடத்தல்: 2 பேர் மீது வழக்கு விழுப்புரம் தாலுகா சப் இன்ஸ்பெக்டர் குணசேகரன் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் மாம்பழப்பட்டு சாலையில் ரோந்து சென்றனர். அப்போது, நன்னாடு பஸ் நிறுத்தம் அருகே டிப்பர் லாரியில் பாறை கடத்தி வந்தது தெரியவந்தது. உடன், லாரியை பறிமுதல் செய்த போலீசார், திண்டிவனம் அடுத்த கரசானுாரைச் சேர்ந்த பாலு, 36; சக்திவேல், 36; ஆகியோர் மீது, வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர். முதியவர் மாயம் விழுப்புரம் அடுத்த எடப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் வரதராஜன், 75; விவசாயி. இவர், கடந்த பிப்ரவரி 13ம் தேதி, வீட்டிலிருந்து வெளியே சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்காததால், அவரது மகன் தட்சணாமூர்த்தி போலீசில் புகாரளித்தார். காணை போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
06-Oct-2025