உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / குறு மைய விளையாட்டுப் போட்டி

குறு மைய விளையாட்டுப் போட்டி

திண்டிவனம்: திண்டிவனம் வால்டர் ஸ்கடர் மேல்நிலைப் பள்ளி யில் குறு மைய அளவிலான விளையாட்டு போட்டி நடந்தது. ஒலக்கூர் தாலுகாவில் உள்ள அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் பங்கேற்ற கபடி மற்றும் வாலிபால் போட்டிகள் நடந்தது. போட்டிகளை பள்ளி தாளாளர் செல்லதுரை துவக்கி வைத்தார். தலைமையாசிரியர் (பொறுப்பு) ஜெபா, உதவி தலைமையாசிரியர்கள் மோகன், ஜோசப் பிரேம்குமார் உட்பட பலர் பங்கேற்றனர். போட்டிகளை, பள்ளியின் உடற்கல்வி இயக்குநர் ஜான் தலைமையில், உடற்கல்வி ஆசிரியர்கள் பிரான்சிஸ் சாமுவேல், டேவிட் செல்குமார் ஆகியோர் ஒருங்கிணைத்தனர். போட்டியில் வெற்றி பெறும் மாணவர்கள், மாவட்ட அளவில் நடை பெறும் போட்டிகளுக்கு தகுதி பெறுவார்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை