அரசு பொறியியல் கல்லுாரியில் நாளை டான்செட் நுழைவு தேர்வு
விழுப்புரம் ; விழுப்புரம் அரசு பொறியியல் கல்லுாரி மையத்தில், முதுகலை மாணவர் சேர்க்கைக்கான டான்செட் நுழைவு தேர்வு நாளை நடக்கிறது என கல்லுாரி முதல்வர் செந்தில் தெரிவித்துள்ளார்.அவரது செய்திக்குறிப்பு:தமிழக அரசு சார்பில், முதுகலை பொறியியல் மாணவர்கள் சேர்க்கைக்கான, அண்ணா பல்கலைக் கழகம் மூலம் நடத்தப்பட்டு வரும் இந்த கல்வியாண்டிற்கான (2025-26) முதுகலை படிப்புகளுக்கான (எம்.சி.ஏ.,- எம்.பி.ஏ.,) டான்செட் நுழைவு தேர்வு மற்றும் (எம்.இ., - எம்.டெக்., - எம்.ஆர்க்., - எம்.பிளான்) சீட்டா - பி.ஜி., நுழைவு தேர்வுகள் நடத்தப்பட உள்ளது.இந்த நுழைவுத் தேர்வுகள் நாளை 22 மற்றும் 23ம் தேதிகளில் நடைபெற உள்ளது. எம்.சி.ஏ., மாணவர்களுக்கு 22ம் தேதி காலை 10:00 மணிக்கு தொடங்கி 12:30 மணி வரையும், எம்.பி.ஏ., மாணவர்களுக்கு மதியம் 2:30 மணிக்கு தொடங்கி 4:30 மணி வரை யும், எம்.இ., - எம்.டெக்மாணவர்களுக்கு 23ம் தேதி காலை 10:00 மணிக்கு தொடங்கி 12:00 மணி வரையும் நடக்கிறது.விழுப்புரம், காகுப்பம் அண்ணா பல்கலைக்கழக அரசு கல்லுாரி மையத்தில் நடக்கும் இந்த தேர்வில் 950 மாணவர்கள் எழுத உள்ளனர். இத்தேர்வுக்கு வரும் மாணவர்களின் வசதிக்காக, விழுப்புரம் புதிய பஸ் நிலையத்திலிருந்து, காகுப்பம் கல்லுாரி வரை அரசு பஸ் வசதி செய்யப்பட்டுள்ளது.இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.