மகள் மாயம்: தந்தை புகார்
விழுப்புரம்: விழுப்புரத்தில் மகளைக் காணவில்லை என போலீசில், தந்தை புகார் அளித்துள்ளார்.விழுப்புரம், வி.மருதுார், ராஜிவ்காந்தி நகரைச் சேர்ந்தவர் முனியன் மகள் வர்ஷினி, 19; 10ம் வகுப்பு வரை படித்த இவர், மளிகை கடையில் பணிபுரிந்து வந்தார்.இவர், நேற்று முன்தினம், கோவிலுக்குச் செல்வதாக கூறிச் சென்றவர் வீடு திரும்பவில்லை.முனியன் அளித்த புகாரின் பேரில், விழுப்புரம் டவுன் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.