உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / கிணற்றில் விழுந்த மான் மீட்பு

கிணற்றில் விழுந்த மான் மீட்பு

கண்டாச்சிபுரம்: கிணற்றில் விழுந்த மானை தீயணைப்பு வீரர்கள் உயிருடன் மீட்டனர்.விழுப்புரம் மாவட்டம், கண்டாச்சிபுரம் அடுத்த கடையம் கிராமம், காப்புக்காட்டில் இருந்து ஊருக்குள் மான் ஒன்று வழி தவறி வந்தது. இதை கண்ட தெருநாய்கள் மானைத் துரத்தி சென்றதில் மான் அப்பகுதியில் இருந்த விவசாயக்கிணற்றில் தவறி விழுந்தது.இதுகுறித்து பொதுமக்கள் கொடுத்த தகவலின் பேரில், அன்னியூர் தீயணைப்புத்துறை நிலைய அலுவலர் சுரேஷ்குமார், வீரர்கள் சிவசந்தோஷ், பிரபாகரன், சீனிவாசன், அரிகிருஷ்னன் அடங்கிய குழுவினர், மானை உயிருடன் மீட்டனர்.பின்னர் கண்டாச்சிபுரம் பகுதி வனக்காப்பாளர் பிரபுவிடம் மானை ஒப்படைத்தனர். தொடர்ந்து அடுக்கம் காப்புக்காட்டினுள் வனத்துறையினர் பாதுகாப்பாக மானை விட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ