உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / தெய்வானை அம்மாள் வணிக மேலாண்மை நிறுவன துவக்க விழா 

தெய்வானை அம்மாள் வணிக மேலாண்மை நிறுவன துவக்க விழா 

விழுப்புரம்: விழுப்புரத்தில், தெய்வானை அம்மாள் வணிக மேலாண்மை நிறுவன துவக்க விழா இன்று நடக்கிறது. விழுப்புரம் தெய்வானை அம்மாள் மகளிர் கல்லுாரி கடந்த 37 ஆண்டுகளாக இயங்கி வருகிறது. இந்த கல்லுாரியின் அடுத்த முயற்சியாக, தெய்வானை அம்மாள் வணிக மேலாண்மை நிறுவனம் இன்று துவங்க உள்ளது. இந்த நிறுவனம் தமிழக அரசு, ஏ.ஐ.சி.டி.இ., மற்றும் அண்ணா பல்கலை அங்கீகாரத்தை பெற்று பெண்களுக்காக மட்டுமே துவங்கப்படுகிறது. துவக்க விழாவிற்கு நிர்வாக தலைவர் செந்தில்குமார் தலைமை தாங்குகிறார். பேச்சாளர் கோபிநாத் சிறப்புரையாற்றுகிறார். இதுகுறித்து நிர்வாக தலைவர் செந்தில்குமார் கூறுகையில், பன்னாட்டு, இந்திய அளவிலான மேலாண்மை நிறுவனங்களிலும், தொழிற்கூடங்களிலும் பெண்களின் பங்களிப்பு முக்கிய தேவையாக உள்ளது. தெய்வானை அம்மாள் வணிக மேலாண்மை நிறுவனம், பெண் சி.இ.ஓ., தலை சிறந்த மேலாண்மை வல்லுனர்களை உருவாக்குவதற்காக மாணவிகளுக்கு தலைமைத்துவம், ஆளுமை திறன், தொழில்திறன், முனைவு திறன், புத்தாக்க திறனை மேம்படுத்தி, உலக அளவில் பன்னாட்டு, தேசிய அளவிலான வேலைவாய்ப்புகளை பெற்று தருவதை முதன்மை குறிக்கோளாக கொண்டு செயல்பட உள்ளது. சர்வதேச, தேசிய அளவில் மேலாண்மை நிறுவனங்களோடு போட்டி போடும் அளவுக்கு சிறந்த பாடத்திட்டங்களை தலைசிறந்த வல்லுநர்கள் மூலம் உருவாக்கி, சர்வதேச அளவிலான பேராசிரியர்களை கொண்டு அமர்வுகள் நடத்தப்பட உள்ளது. நிகழ்ச்சியில், கல்வி குழுமத்தை சேர்ந்த முதல்வர்கள், துணை முதல்வர்கள், புல முதன்மையர்கள், துறை தலைவர்கள், பேராசிரியர்கள் பலர் கலந்து கொள்கின்றனர் என, தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை