உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / ஜனநாயக மாதர் சங்க மாவட்ட மாநாடு

ஜனநாயக மாதர் சங்க மாவட்ட மாநாடு

விழுப்புரம்: விழுப்புரத்தில் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க மாவட்ட மாநாடு நடந்தது. மாநில தலைவர் வாலண்டினா தலைமை தாங்கி பேசினார். மாநில பொருளாளர் பிரமிளா, துணைச் செயலாளர் கீதா, செயற்குழு உறுப்பினர் மோகனா முன்னிலை வகித்தனர். மாவட்ட தலைவர் தமிழ்செல்வி, செயலாளர் இலக்கியபாரதி, பொருளாளர் சித்ரா உள்பட மாவட்ட, வட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர். மாநாட்டில், தமிழகத்தில் தொடரும் பெண்கள், பெண் குழந்தைகள் மீதான பாலியல் வன்முறையை தடுத்து நிறுத்த வேண்டும். குடும்ப வன்முறைக்கு எதிரான சிறப்பு சட்டத்தை தமிழக அரசு இயற்ற வேண்டும். பள்ளி, கல்லுாரிகளில் பாலின சமத்துவ பாடத்திட்டத்தை அமல்படுத்த வேண்டும். அரசு பணிகளில் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பது உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ