மேலும் செய்திகள்
பி.டி.ஓ., அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம்
19-Sep-2024
மயிலம் : மயிலம் அருகே உள்ள ஜக்காம்பேட்டை சப் கலெக்டர் அலுவலகம் எதிரே கிராம நிர்வாக அலுவலர்கள் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கம் சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு, மாவட்ட அமைப்பு செயலாளர் உமாசங்கர், தலைவர் பாலாஜி ஆகியோர் தலைமை தாங்கினர். துணைத் தலைவர் வெற்றி கொண்டான், திண்டிவனம் வட்ட தலைவர் சீனிவாசன், செயலாளர் வீரசேகரன் முன்னிலை வகித்தனர். கமலக்கண்ணன் வரவேற்றார். வட்ட துணைத் தலைவர் விநாயகமூர்த்தி, இணைச் செயலாளர் கிருஷ்ணன் பெருமாள் கிராம நிர்வாக அலுவலர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.ஆர்ப்பாட்டத்தில், கிராம நிர்வாக அலுவலர்களுக்கு கூடுதலாக வழங்கப்பட்ட வேளாண் துறையின் பணியான டிஜிட்டல் கிராப் சர்வே பணிக்கு கூடுதல் பணியாளர்களை நியமிக்க வேண்டும். அவரவர் துறை சார்ந்த பணிகளை அவர்களுக்கே வழங்க வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
19-Sep-2024