மேலும் செய்திகள்
மா.கம்யூ., ஆர்ப்பாட்டம்
17-Sep-2025
கண்டாச்சிபுரம்: கண்டாச்சிபுரம்-நல்லாப்பாளையம் சாலையை சரி செய்ய வலியுறுத்தி, மா.கம்யூ., சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்திது. கண்டாச்சிபுரத்திலிருந்து நல்லாப்பாளையம் வழியாக அனந்தபுரம் செல்லும் சாலை கடந்த சில ஆண்டுகளாக பழுதடைந்துள்ளது. இதனை சரி செய்ய நடவடிக்கை மேற்கொள்ள மா.கம்யூ., கட்சி சார்பில், அந்த சாலையில் கண்டன ஆர்பாட்டம் நடந்தது. இதில் முருகன் தலைமை வகித்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் வேல்மாறன், வட்ட செயலாளர் கணபதி, தெய்வமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் வட்டக்குழு உறுப்பினர் ராமலிங்கம், முருகானந்தம், அருண்குமார் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
17-Sep-2025