அரசு ஊழியர்களுக்கான துறை தேர்வு இன்று துவக்கம்
விழுப்புரம் : தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் அரசு ஊழியர்களுக்கான, துறை தேர்வுகள் இன்று முதல் துவங்குகிறது.கலெக்டர் ஷேக் அப்துல் ரஹ்மான் செய்திக்குறிப்பு:விழுப்புரம் மாவட்டத்தில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் மே மாதத்திற்கான துறை தேர்வுகள் இன்று 19ம் தேதி முதல் வரும் 23ம் தேதி வரை கணினி வழி தேர்வு 5 மையத்தில் நடக்கிறது.இதில், 1,82 தேர்வர்கள் பங்கேற்கின்றனர். வரும் 26ம் தேதி முதல் 29ம் தேதி வரை விரிந்துரைக்கும் வகையிலான தேர்வு ஒரு மையத்தில் நடைபெற உள்ளது. இதில், 1,312 பேர் பங்கேற்கின்றனர். தேர்வர்கள் குறித்த நேரத்தில் தேர்வு மையத்திற்கு வந்து தேர்வில் பங்கேற்க வேண்டும்.இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.