உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / மரக்காணம் மேற்கு ஒன்றியத்தில் துணை முதல்வர் பிறந்த நாள் விழா

மரக்காணம் மேற்கு ஒன்றியத்தில் துணை முதல்வர் பிறந்த நாள் விழா

திண்டிவனம்: திண்டிவனம் அருகே மன்னார்சாமி கோவில் பகுதியில் மரக்காணம் மேற்கு ஒன்றிய தி.மு.க.,சார்பில் துணை முதல்வர் உதயநிதி பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. மரக்காணம் மேற்கு ஒன்றிய தி.மு.க.,சார்பில் நேற்று காலை நடந்த நிகழ்ச்சியில் மரக்காணம் மேற்கு ஒன்றிய தி.மு.க.,செயலாளர் பழனி தலைமையில் கட்சி கொடி ஏற்றி வைக்கப்பட்டு, பொது மக்களுக்கு இனிப்பு மற்றும் உணவு வழங்கப்பட்டது.இதில் ஒன்றிய நிர்வாகிகள் திருமலைகுமார், சரவணன், மீனாகுமாரி முருகன், ராமமூர்த்தி, ஆதிகேசவன், ஆறுமுகம், மாரி, ஒன்றிய கவுன்சிலர்கள் வேலாயுதம் அமுதாகிருஷ்ணமூர்த்தி, மகாலட்சுமிகாளிதாஸ், பஞ்சாயத்து தலைவர்கள் ரமேஷ், ஏழுமலை சசிகலாஏழுமலை உமாவதிமனோகரன் , கிளைசெயலாளர்கள் பச்சையப்பன், செந்தில்குமார், சிவக்குமார், ராபர்ட், வல்லரசு அஜய்சேகர், செல்வகுமார், ராஜன், கலைமணி கோகுல் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி