உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / துணை முதல்வர் வருகை: தி.மு.க., ஆலோசனை கூட்டம்

துணை முதல்வர் வருகை: தி.மு.க., ஆலோசனை கூட்டம்

திண்டிவனம்: துணை முதல்வர் உதயநிதி வருகையொட்டி, விழுப்புரத்தில் தி.மு.க., மாவட்ட ,நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடந்தது.விழுப்புரம் மாவட்டத்திற்கு வரும் 5 மற்றும் 6 ஆகிய தேதிகளில் நடைபெறும் ஆய்வுக் கூட்டம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் துணை முதல்வர் உதயநிதி பங்கேற்கிறார்.இதையொட்டி, திண்டிவனத்தில் நேற்று காலை விழுப்புரம் வடக்கு மாவட்ட தி.மு.க., நிர்வாகிகள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் நடந்தது.மாவட்ட அவைத் தலைவர் மஸ்தான் தலைமை தாங்கினார். விழுப்புரம் வடக்கு மாவட்ட செயலாளர் சேகர் வரவேற்றார். அமைச்சர் பொன்முடி சிறப்புரையாற்றினார்.கூட்டத்தில், முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் மாசிலாமணி, சேதுநாதன், சீத்தாபதி சொக்கலிங்கம், தீர்மானக்குழு உறுப்பினர் சிவா, மாவட்ட பொருளாளர் ஜனகராஜ், தொகுதி பொறுப்பாளர்கள் புகழேந்தி, அப்துல் மாலிக், ஜாபர் அலி.திண்டிவனம் நகர செயலாளர் கண்ணன், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ஆனந்த், துணை அமைப்பாளர்கள் ரமேஷ், விஜயகுமார், பாபு, திண்டிவனம் நகர மன்ற தலைவர் நிர்மலா ரவிச்சந்திரன், மாவட்ட துணைச் செயலாளர் ரவிக்குமார்.ஒன்றிய சேர்மன்கள் சொக்கலிங்கம், தயாளன், செயற்குழு உறுப்பினர் சின்னசாமி, ஒன்றிய செயலாளர்கள் பழனி, ராஜாராம், ரவிச்சந்திரன், பொதுக்குழு உறுப்பினர் கதிரேசன், வழக்கறிஞர் அணி ஆதித்தன், செஞ்சி பேரூராட்சி சேர்மன் மொக்தியார் உட்பட பலர் பங்கேற்றனர்.கூட்டத்தில், வரும் 5ம் தேதி வருகை தரும் துணை முதல்வர் உதயநிதிக்கு வடக்கு மாவட்ட தி.மு.க., சார்பில் வரவேற்பு கொடுப்பது. உதயநிதி பிறந்த நாளின் போது மாவட்டத்தில் அனைத்து பகுதிகளிலும் கட்சிக் கொடியேற்றி, நலத்திட்ட உதவிகள் வழங்குவது என்பது உட்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கட்சியினருக்கு அமைச்சர் கட்டளை

கூட்டத்தில், அமைச்சர் பொன்முடி பேசுகையில், 'துணை முதல்வர் உதயநிதிக்கு வரும் 5ம் தேதி மாலை 3:00 மணிக்கு திண்டிவனத்தில் வடக்கு மாவட்டம் சார்பிலும், தொடர்ந்து விக்கிரவாண்டியில் தெற்கு மாவட்டம் சார்பிலும் வரவேற்பு கொடுக்கப்படுகிறது. கட்சியினர் திரளாக பங்கேற்க வேண்டும். கடந்த வாரம் ஒருவர் மாநாட்டிற்கு வந்து சென்றுள்ளார். அந்த மாநாட்டிற்கு பதில் கொடுக்கும் வகையில் கட்சியினர் திரளாக வரவேற்பில் பங்கேற்க வேண்டும். உதயநிதி வருகைக்காக யாரும் கட் அவுட், பேனர் வைக்கக் கூடாது. அதற்கு பதிலாக கட்சிக் கொடியை வழிஎங்கும் கட்ட வேண்டும், அதே போல் போஸ்டர்கள் அடிக்க வேண்டும்' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி