துணை முதல்வர் ஆய்வு
விழுப்புரம், : விழுப்புரத்தில் கனமழை பாதிப்பை துணை முதல்வர் உதயநிதி பார்வையிட்டார்.விழுப்புரம் மாவட்டத்தில், தொடர் கனமழை பாதிப்புகளை பார்வையிட வந்த துணை முதல்வர் உதயநிதி, நேற்று மாலை 5.00 மணிக்கு வருகை தந்தார். இந்திரா நகர் ரயில்வே தரை பாலத்தில் மழைநீர் தேங்கியதை பார்வையிட்டார். சேவியர் காலனி பகுதியில் மழையால் பாதிக்கப்பட்ட மக்களை பார்வையிட்டு, நிவாரண பொருள்களை வழங்கினார்.விழுப்புரம் புதிய பஸ் நிலையத்தில் குளம்போல் மழைநீர் தேங்கியதை பார்வையிட்டார். மழைநீர் வடிகால் பணிகளை துரிதமாக மேற்கொள்ளுமாறு அதிகாரிகளிடம் அறிவுறுத்தினார்.பின்னர் அவர் கடலூருக்கு புறப்பட்டுச் சென்றார். அமைச்சர் பொன்முடி, எம்.எல்.ஏ.,க்கள் லட்சுமணன், அன்னியூர் சிவா உள்ளிட்டோர் உடனிருந்தனர்.விழுப்புரம் மாவட்டத்தில் கனமழை பாதிப்பை பார்வையிடுவதற்காக, முதல்வர் ஸ்டாலின் இன்று வருகை தர உள்ளார்.