உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / உலக தகவல்களை தரும் தினமலர்-பட்டம்

உலக தகவல்களை தரும் தினமலர்-பட்டம்

திறமையை வளர்த்து கொள்ளலாம்

'தினமலர் - பட்டம்' இதழை படித்து வருகிறேன். இந்த இதழ் எனக்கு பொது அறிவு மட்டுமின்றி, என் திறமையை வளர்த்து கொள்வதற்கான வாய்ப்புகளை ஏற்படுத்தியது. இந்த வினாடி வினா போட்டியில் பங்கேற்று வெற்றி பெற தமிழ் ஆசிரியை உதவியாக இருந்தார். இறுதி போட்டியில் நிச்சயமாக வென்று எங்கள் பள்ளிக்கு பெருமை சேர்ப்பேன். - திருமாணிக்கம், 9ம் வகுப்பு

'பட்டம்' பெருமையை கூறுவேன்

இந்த 'தினமலர் - பட்டம்' இதழை நான் வினாடி வினா போட்டியில் வெல்வதற்காகவே படித்தேன். அதனால், இன்று நான் பொது அறிவு சார்ந்த சவால்களை எதிர்கொள்ள பெரிதும் உறுதுணையாக உள்ளது 'பட்டம்' இதழ்தான். இதன் மூலம் தற்போது நான் வென்றது எனக்கு மிகவும் மகிழ்வான தருணமாக உள்ளது. பட்டம் இதழின் பெருமையை எனக்கு பின்னால் வரும் மாணவர்களிடமும் நான் கண்டிப்பாக எடுத்துக் கூறுவேன். - சூரியா, 9ம் வகுப்பு

படிக்கும்போதே சாதிக்கலாம்

நான் படிப்பில் மட்டுமே சாதிக்கலாம் என நினைத்தேன். ஆனால் 'தினமலர் - பட்டம்' இதழை படித்து பொது அறிவை கற்று கொண்டால் படிக்கும் போதே சாதிக்கலாம் என்பதை புரிந்து கொண்டேன். இந்த போட்டியில் வெல்ல எங்களுக்கு உறுதுணையாக தமிழாசிரியை இருந்தார். நான் வெல்ல துணையாக இருந்த ஆசிரியர்களுக்கு நன்றி. - ரிதா, 8ம் வகுப்பு

உலக தகவல்கள் பெறலாம்

திறமையாக பயின்றால் மாணவர்கள் யார் வேண்டுமானாலும் சாதிக்கலாம் என்பதை 'தினமலர் - பட்டம்' இதழ் உணர்த்துகிறது. அறிவியல் சார்ந்து மட்டுமின்றி, உலக தகவல்களையும் 'பட்டம்' இதழில் பெறலாம். படிப்பை கடந்து வாசிப்பு திறனும் மாணவர்களுக்கு தேவை என்பதை இந்த இதழ் மூலம் புரிந்து கொண்டேன். - சிந்துஜா, 8ம் வகுப்பு


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ