உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறப்பு

நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறப்பு

விக்கிரவாண்டி; விக்கிரவாண்டி அடுத்த பூண்டியில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை எம். எல். ஏ., திறந்து வைத்தார்.விழுப்புரம் மாவட்டம் ,விக்கிரவாண்டி ஒன்றியத்தில் அரசு சார்பில் 15 இடங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்படுகின்றன. நேற்று காலை பூண்டியில் எம்.எல்.ஏ., அன்னியூர் சிவா தலைமை தாங்கி நெல் கொள்முதல் நிலையத்தை திறந்து வைத்தார்.ஆத்மா குழு தலைவர் வேம்பி ரவி,ஊராட்சி மன்ற தலைவி தனலட்சுமி ரவி, மண்டல மேலாளர் மனோகரன், நெல் கொள்முதல் அலுவலர் தணிகைவேல், எழுத்தர் மணிகண்டன், கண்காணிப்பு குழு எத்திராசன், சிற்றூராட்சிகள் சங்க துணைத் தலைவர் சண்முகானந்தம், பொருளாளர் கனிமொழி சிலம்பரசன், ஒன்றிய கவுன்சிலர்கள் முகிலன், அருணாச்சலம்,முன்னாள் தலைவர் கருணாநிதி உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ