உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / விழுப்புரம் கலெக்டர் ஆபீசில் மாற்றுத்திறனாளி திடீர் தர்ணா

விழுப்புரம் கலெக்டர் ஆபீசில் மாற்றுத்திறனாளி திடீர் தர்ணா

விழுப்புரம் : விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்தில், மாற்றுத் திறனாளி திடீர் தர்ணாவில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.செஞ்சி தாலுகா கம்மந்தூர் கிராமத்தை சேர்ந்தவர் பொன்னுசாமி, 40; மாற்று திறனாளி. நேற்று விழுப்புரம் கலெக்டர் அலுவலகம் வந்த பொன்னுசாமி, அலுவலக வாயில் முன் அமர்ந்து, போலீசாரை கண்டித்து, திடீர் போராட்டத்தில் ஈடுபட்டார்.தனது வீட்டை புதுப்பிக்க உள்ளதால், அதில் உள்ள சகோதரரின் குடும்ப பொருட்களை எடுத்து செல்ல கூறியும் எடுக்காமல் காலம் கடத்தி வருவதாகவும், செஞ்சி போலீசில் புகார் அளித்து 6 மாதம் கடந்தும் தன்னை அலைக்கழித்து அவதுாறாக பேசுவதாக பொன்னுசாமி கூறினார்.போலீசார் மாற்றுத்திறனாளியை சமாதானம் செய்து கலெக்டரிடம் மனு அளிக்க அனுப்பி வைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ