உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / மாற்றுத் திறனாளிகள் ஒன்றிய அலுவலகம் முற்றுகை

மாற்றுத் திறனாளிகள் ஒன்றிய அலுவலகம் முற்றுகை

விக்கிரவாண்டி : விக்கிரவாண்டி அடுத்த ஒரத்துாரில் நுாறு நாள்வேலை கேட்ட மாற்றுத் திறனாளிகள் ஒன்றிய அலுவலகத்தை முற்றுகை யிட்டதால் பரபரப்பு நிலவியது.விக்கிரவாண்டி ஒன்றிய அலுவலகம் முன் நேற்று காலை, தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் சங்கம் சார்பில் ஒன்றிய தலைவர் அய்யனார் தலைமையில் 20 பெண்கள் உட்பட 50 பேர், 100 நாள் வேலை வழங்கக்கோரி முற்றுகையிட்டனர்.பி.டி.ஓ., நாராயணன், துணை பி.டி.ஓ., குமாரி ஆகியோர் பேச்சு வார்த்தை நடத்தி ஒரத்துார் மதுரா லட்சுமிபுரம் பகுதியில் வேலை தருவதாக கூறியதன் பேரில் அனைவரும் அங்கிருந்து களைந்து சென்றனர்.மாவட்ட பொருளாளர் ஜெயக்குமார், துணைச் செயலாளர் கலியமூர்த்தி, நகர தலைவர் பால்ராஜ், வட்ட துணைச் செயலாளர் பிரேமா, கிளை நிர்வாகிகள் மகேஸ்வரி, மகுடமணி உள்ளிட்ட பலர் பேச்சு வார்த்தையில் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை