உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / இலங்கைத் தமிழர்களின் நிலை அலுவலர்களுடன் கலந்துரையாடல்

இலங்கைத் தமிழர்களின் நிலை அலுவலர்களுடன் கலந்துரையாடல்

விழுப்புரம்: இலங்கைத் தமிழர்களின் முன்னேற்றம், குடியுரிமை குறித்து அலுவலர்களுடன் கலந்துரையாடல் நடந்தது.இலங்கைத் தமிழர்களின் பல்வேறு சவால்களை எதிர்கொள்ளும் அரசின் பல்வேறு திட்டங்கள் குறித்து, விழுப்புரம், சென்னை, திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலை ஆகிய 6 மாவட்டங்களில், துறை அலுவலர்களுடனான கலந்துரையாடல் நிகழ்ச்சி நடந்தது.சென்னையிலிருந்து, அயலகத் தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத்துறை ஆணையர் கிருஷ்ணமூர்த்தி காணொலி காட்சியின் வாயிலாக துவக்கி வைத்து பேசினார். விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்தில், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) யோகஜோதி தலைமையில், மாவட்ட உயர் அலுவலர்களும், இலங்கை அகதிகள் முகாம்களைச் சேர்ந்த சமூக பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர். இதே போல், 6 மாவட்ட அலுவலர்கள், பிரதிநிதிகள் பங்கேற்றனர்.இக்கலந்துரையாடலில், 18 முகாம்களில் வசிக்கும் இலங்கைத் தமிழர்களின் முன்னேற்றம், குடியுரிமை, வேலைவாய்ப்பு, கல்வி மற்றும் அவர்களின் தனிப்பட்ட தரவுகளை இணையதளத்தில் பதிவு செய்வது தொடர்பாகவும் ஆலோசித்து, அறிவுறுரை வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ