அரசு பள்ளி மாணவர்களுக்கு நோட்டு புத்தகம் வழங்கல்
மயிலம்: மயிலம் அடுத்த ஆசூர் அரசு பள்ளியில் மாணவ, மாணவியர்களுக்கு நோட்டு புத்தகம் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. பள்ளி வளாகத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு தலைமை ஆசிரியர் சுமதி தலைமை தாங்கினார். உதவி பேராசிரியர் ஜெகதீசன், கிருஷ்ணமூர்த்தி முன்னிலை வகித்தனர். டிரஸ்ட் இயக்குனர் மணிவேலன் அரசு பள்ளி மாணவ ,மாணவியருக்கு நோட்டுப் புத்தகங்களை வழங்கி பேசினார். சிவகுமார், மல்லிகை விமலா, கோவிந்தராஜன், பன்னீர்செல்வம் பேசினர். பொன்மாணிக்கவேல், சுமதி, நவநீதகிருஷ்ணன் வாழ்த்தி பேசினர். கிருஷ்ணன், ராஜன், பள்ளி மாணவ, மாணவியர்கள் பங்கேற்றனர்.