உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / காய்கறி, பழச்செடி, பயறு வகை விதை தொகுப்புகள் வினியோகம்

காய்கறி, பழச்செடி, பயறு வகை விதை தொகுப்புகள் வினியோகம்

விழுப்புரம்:: மாவட்டத்தில் வேளாண்துறை மூலம் காய்கறி, பழச்செடி, பயறு வகை விதை தொகுப்புகள் இலவசமாக வழங்கப்பட உள்ளதாக, கலெக்டர் ஷேக் அப்துல் ரஹ்மான் தெரிவித்துள்ளார். அவர் விடுத்த செய்திக்குறிப்பு:மாவட்டத்திலுள்ள அனைத்து வட்டாரங்களிலும் இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இத்திட்டத்தில் 49,500 காய்கறி விதை தொகுப்புகளும் 30,550 பழச்செடி தொகுப்புகளும் மற்றும் 3,000 பயறுவகை தொகுப்புகளும் விவசாயிகள் மற்றும் பொதுமக்களுக்கு வழங்கப்பட உள்ளது. இதற்காக, 13 வட்டாரங்களில் நடக்க உள்ள வேளாண் ஊட்டச்சத்து திட்ட துவக்க நிகழ்வில், அனைத்து விவசாயிகள், பொது மக்கள் கலந்துகொண்டு பயன்பெறலாம்.காய்கறிகள், பழங்கள் தினசரி தேவை சராசரியாக ஒரு நபருக்கு 400 கிராம். ஊட்டச்சத்து மிக்க நஞ்சற்ற காய்கறிகள் கிடைப்பதை உறுதி செய்திடவும், மக்களின் அன்றாட காய்கறி தேவைகளை நிறைவு செய்யவும், வீட்டு தோட்டங்களில் காய்கறிகள் வளர்ப்பதை ஊக்குவிக்கும் விதமாக, தக்காளி, கத்தரி, வெண்டை, மிளகாய், கொத்தவரை மற்றும் கீரை 6 காய்கறிகள் அடங்கிய தொகுப்புகள் மற்றும் பப்பாளி, கொய்யா மற்றும் எலுமிச்சை ஆகிய 3 வகையான பழச்செடி தொகுப்புகள் 100 சதவீத மானியத்தில் வழங்க உள்ளது.வேளாண் துறை மூலம் மரத்துவரை, காராமணி, அவரை ஆகிய பயறு வகை விதை தொகுப்புகள் மானியத்தில் வழங்கப்படும். பொதுமக்கள், தங்கள் ஆதார் நகலுடன், வட்டார தோட்டக்கலை அலுவலகத்தை அனுகியும் அல்லது tnhorticulture.tn.gov.in/kit என்ற இணையத்தில் பதிவுசெய்தும், இத்திட்டத்தில் பயன்பெறலாம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி