மேலும் செய்திகள்
சிறுதானிய விவசாயிகளுக்கு மானியம்
24-May-2025
விழுப்புரம் : தமிழக சிறுதானிய இயக்கத்தில் பயன்பெற விவசாயிகள் பதிவு செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.விழுப்புரம் மாவட்ட வேளாண் இணை இயக்கு நர் ஈஸ்வர் செய்திக்குறிப்பு:விழுப்புரம் மாவட்டத்தில் காரீப் மற்றும் ரபி பருவத்தில் சராசரியாக 12 ஆயிரத்து 500 எக்டர் பரப்பளவில் சிறுதானியங்கள் மற்றும் குறுதானியங்கள் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது.தமிழக அரசால் அறிவிக்கப்பட்ட சிறுதானிய சிறப்பு மண்டலத்தில் விழுப்புரம் மாவட்டம் ஒரு அங்கமாக உள்ளது. நடப்பாண்டில் சிறுதானியங்களின் பரப்பு, உற்பத்தி மற்றும் நுகர்வு ஆகியவற்றை அதிகரிக்கும் பொருட்டு மாவட்டத்தில் தமிழக சிறுதானிய இயக்கம் செயல்படுத்தப்பட உள்ளது.இத்திட்டத்தின்கீழ் குறுதானிய சாகுபடிக்கு உழுதல், களை எடுத்தல், பயிர் பாதுகாப்பு மருந்து தெளித்தல் மற்றும் பறவை விரட்டுதல் ஆகிய இடைநேர்த்தி செயல்பாடுகளுக்கு 1,600 ஏக்கர் என்ற விகிதத்தில், ஒரு விவசாயிக்கு, அதிகபட்சமாக ஒரு ஏக்கர் பரப்பிற்கு பின்னேற்பு மானியமாக வழங்கப்படும்.குறுதானியங்களுக்கான சிறுதளை விநியோகம் செய்தல் இனத்தின்கீழ் ஏக்கருக்கு 4 கிலோ குறுதானிய விதை அதிகபட்சமாக ஒரு விவசாயிக்கு ஒரு சிறுதளை வீதம் நுாறு சதவீதம் மானியத்தில் வழங்கப்படும்.மாற்றுபயிர் சாகுபடி திட்டத்தின் மூலம் சிறுதானிய சாகுபடி பரப்பை அதிகரிக்கும் பொருட்டு விதைகள், திரவ உயிர் உரங்கள், நுண்ணுாட்ட கலவை, அறுவடை மானியம் என ஒரு விவசாயிக்கு அதிகபட்சமாக ஒரு ஏக்கருக்கு 1250 அல்லது 50 சதவீத மானியத்தில் இடுபொருட்கள் வழங்கப்பட உள்ளது.விவசாயிகள் உழவர் செயலி மூலமாக பதிவு செய்வதன் மூலம் முன்னுரிமை அடிப்படையில் இத்திட்டத்தில் பயனடையலாம்.இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
24-May-2025