துாய்மை இயக்கம் மாவட்ட குழுக் கூட்டம்
விழுப்புரம் : விழுப்புரம் மாவட்டத்தில் சிறப்பு திட்ட செயலாக்கத்துறை சார்பில் துாய்மை இயக்கம் தொடர்பான மாவட்ட அளவிலான குழுக்கூட்டம் நடந்தது.கலெக்டர் ஷேக்அப்துல் ரஹ்மான் தலைமை தாங்கி பேசுகையில்,'மாவட்டத்தில்உள்ள கிராமம், பேரூராட்சி மற்றும் நகராட்சி பகுதிகளில் மக்கும், மக்காத குப்பைகளை கண்டறிந்து, மறு சூழற்சி பணிகளை மேற்கொள்ள வேண்டும். அதேபோல், மறு சுழற்சி செய்யும் குப்பைகளை, சிமெண்ட் தொழிற்சாலைகளுக்கு அனுப்பவேண்டும். மறு சுழற்சி செய்ய முடியாத கழிவுகளை, பாதுகாப்பான முறையில் அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். மருத்துவ கழிவுகளை தரம் பிரித்து, பாதுகாப்பான முறையில் அகற்றுவதை உறுதிசெய்ய வேண்டும்.பிளாஸ்டிக் இல்லாத மாவட்டமாகவும், சுற்றுப்புற பாதுகாப்பு தன்மை கொண்ட மாவட்டமாக மாறுவதற்கு, அனைத்துத்துறை அலுவலர்களும் ஒருங்கிணைந்து பணியாற்றிட வேண்டும்' என்றார்.கூட்டத்தில் கூடுதல் கலெக்டர் பத்மஜா, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) யோகஜோதி உட்பட துறை சார்ந்த அலுவலர்கள் பங்கேற்றனர்.