மாவட்ட தி.மு.க., பொறுப்பாளர் முதல்வரை சந்தித்து வாழ்த்து
விழுப்புரம் : விழுப்புரம் மத்திய மாவட்ட தி.மு.க., பொறுப்பாளர் லட்சுமணன் எம்.எல்.ஏ., முதல்வர் ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றார்.விழுப்புரம் மத்திய மாவட்ட தி.மு.க., பொறுப்பாளராக லட்சுமணன் எம்.எல்.ஏ., நியமிக்கப்பட்டுள்ளார். இவரை, தி.மு.க., தலைமைக் கழகம் நியமனம் செய்துள்ளது. இதையடுத்து மத்திய மாவட்ட பொறுப்பாளர் லட்சுமணன் எம்.எல்.ஏ., முதல்வரும், தி.மு.க., தலைவருமான ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஆகியோரை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.