உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / மத்திய குழுவினரிடம் மாவட்ட தி.மு.க., கோரிக்கை

மத்திய குழுவினரிடம் மாவட்ட தி.மு.க., கோரிக்கை

விழுப்புரம், : விழுப்புரம் மாவட்டத்தில் கனமழை பாதிப்புகள் குறித்த அறிக்கையை, மத்திய அரசு குழுவிடர் மாவட்ட தி.மு.க., செயலாளர் வழங்கினார்.பெஞ்சல் புயலால் ஏற்பட்ட கனமழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிடுவதற்கு, மத்திய அரசின் குழுவினர் நேற்று காலை விழுப்புரம் மாவட்டத்திற்கு வந்தனர்.விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்தில், மத்திய குழுவினர், கலெக்டர் பழனி உள்ளிட்ட உயர் அதிகாரிகளுடன் வெள்ள சேத மதிப்புகள் குறித்து ஆய்வு கூட்டம் நடத்தினர்.அப்போது, மாவட்டத்தில் கனமழை பாதிப்புகள் குறித்த அறிக்கையை, மாவட்ட தி.மு.க., செயலாளர் கவுதம சிகாமணி, மத்திய குழுவினரிடம் வழங்கினார். அப்போது, வனத்துறை அமைச்சர் பொன்முடி, எம்.எல்.ஏ.,க்கள் லட்சுமணன், அன்னியூர் சிவா, மாவட்ட சேர்மன் ஜெயச்சந்திரன் ஆகியோர் உடனிருந்தனர்.இந்த அறிக்கையில், மாவட்டத்தில் கனமழையால் வீடுகள், சாலைகள், கால்நடைகள் உள்ளிட்ட வற்றின் பாதிப்புகளை விளக்கமாக குறிப்பிட்டு, போதிய நிதியை மத்திய அரசு வழங்கிட வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை