மேலும் செய்திகள்
பத்திரங்களை மாவட்ட பதிவாளர்கள் தணிக்கை செய்ய தடை
02-May-2025
விழுப்புரம் விழுப்புரம் மாவட்ட சிறையில், மாவட்ட நீதிபதி, அதிகாரிகளுடன் நேரில் சென்று ஆய்வு செய்தார்.விழுப்புரம் அருகே வேடம்பட்டில் உள்ள மாவட்ட சிறைக்கு நேற்று சென்ற, மாவட்ட நீதிபதியும், மாவட்ட சட்டப் பணிகள் ஆணைய குழு தலைவருமான மணிமொழி, சிறையில் கைதிகளுக்கு கொடுக்கும் உணவு பொருள்கள் தரம், கழிவறை மற்றும் குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் குறித்து ஆய்வு செய்தார்.தொடர்ந்து, கைதிகளை பார்க்க வரும் குடும்பத்தினர், உறவினர்கள் காத்திருக்கும் இடங்களில் சி.சி.டி.வி., கேமரா போன்ற கண்காணிப்புகள் சரியாக உள்ளதாக என பார்வையிட்டு, அங்குள்ள சிறை அலுவலர்களிடம் வசதிகள் குறித்து கேட்டறிந்தார்.ஆய்வின்போது, விழுப்புரம் கலெக்டர் ஷேக்அப்துல்ரகுமான், எஸ்.பி., சரவணன், ஆர்.டி.ஓ., முருகேசன் மற்றும் சிறைத் துறை அதிகாரிகள் உடனிருந்தனர்.
02-May-2025