வாசகர்கள் கருத்துகள் ( 1 )
ஒரு வாரம் அரசு விடுமுறை அறிவித்து இதைக் கொண்டாடலாம்.
விழுப்புரம் : விழுப்புரத்தில் துணை முதல்வர் பிறந்த நாளையொட்டி நடந்த மாவட்ட அளவிலான இறகுப்பந்தாட்ட போட்டியில் வெற்றி பெற்ற அணிகளுக்கு கவுதமசிகாமணி பரிசு கோப்பை வழங்கினார்.விழுப்புரத்தில் துணை முதல்வர் உதயநிதி பிறந்த நாளை யொட்டி, தி.மு.க., தெற்கு மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி சார்பில், மாவட்ட அளவிலான இறகு பந்து போட்டி விழுப்புரம் சதா அகாடமி மையத்தில் நேற்று முன்தினம் தொடங்கி இரண்டு நாள்கள் நடந்தது. மாவட்டம் முழுவதும் இருந்து இரட்டையர் பிரிவில் 50 அணிகள் கலந்துகொண்டனர்.நேற்று இரவு நடந்த இறுதிப்போட்டியில், திண்டிவனத்தைச் சேர்ந்த கனிஷ், கோபி அணியினர் வெ ற்றி பெற்று முதலிடம் பெற்றனர். கண்டமங்கலத்தை சே ர்ந்த அரவிந்த், இனியன் அணி இரண்டாம் இடத்தையும், விழுப்புரத்தை சே ர்ந்த சாந்தனு, நித்தீஷ் அணி மூன்றாமிடத்தையும், விழுப்புரம் விஜய், ரமேஷ் அணி நான்காம் இடத்தையும் பிடித்தனர்.இதன் பரிசளிப்பு விழாவிற்கு விளையாட்டு மேம்பாட்டு அணி அமைப்பாளர் பாலாஜி வரவேற்றார். மாவட்ட சேர்மன் ஜெ யச்சந்திரன், மாவட்ட பொருளாளர் ஜனகராஜ், முன்னாள் எம்.எல்.ஏ., புஷ்பராஜ், துணை செயலாளர் தயாஇந்திரையன், ஒன்றிய செயலாளர் ராஜா, நகர பொருளாளர் இளங்கோ, விளையாட்டு அணி துணை அமைப்பாளர்கள் சதீஷ், அசோக்குமார், சக்திவேல், ஞானதேவா முன்னிலை வகித்தனர்.மாநில விளையாட்டு மேம்பாட்டு அணி துணை செயலர் கவுதமசிகாமணி வெற்றி பெற்ற அணியினருக்கு பரிசு கோப்பை, பதக்கங்களை வழங்கி பாராட்டினார். முதல் பரிசாக ரூ.25 ஆயிரமும், 2ம் பரிசாக ரூ.15 ஆயிரமும், 3வது பரிசு ரூ.10 ஆயிரமும், 4வது பரிசு ரூ.5 ஆயிரமும், சான்றிதழ்களும் வழங்கப்பட்டது. போட்டிகளை வாலிபால் மணி, பாபு உள்ளிட்டோர் ஒருங்கிணைத்தனர்.
ஒரு வாரம் அரசு விடுமுறை அறிவித்து இதைக் கொண்டாடலாம்.