உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / வேளாண் இயந்திரங்கள் பராமரிப்பு மாவட்ட அளவிலான முகாம்

வேளாண் இயந்திரங்கள் பராமரிப்பு மாவட்ட அளவிலான முகாம்

விழுப்புரம் : விழுப்புரம் பெருந்திட்ட வளாக மைதானத்தில், வேளாண் பொறியியல் துறை சார்பில் வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகள் பராமரிப்பு குறித்த மாவட்ட அளவிலான முகாம் நடந்தது.கலெக்டர் ஷேக் அப்துல் ரஹ்மான் தலைமை தாங்கி, முகாமை துவக்கி வைத்து கூறியதாவது; விவசாயிகள் வேளாண் பணிக்கு பயன்படுத்தும் இயந்திரங்கள், கருவிகளை பராமரிக்க முகாம் நடந்தப்பட்டது. டிராக்டர் பழுது நீக்கத்திற்காக 7 டிராக்டர் கம்பெனிகள் வந்துள்ளது. 13 புதிய டிராக்டர் செயல் திறனுக்காக வந்துள்ளது. ஒரு டிராக்டர் பழுது நீக்கத்திற்காக கொண்டு வரப்பட்டுள்ளது. வைக்கோல் சுருட்டும் இயந்திரம், நெல் நடவு இயந்திரம், களை எடுக்கும் கருவி, சூரியசக்தி பம்ப் செட், உரம் தெளிக்கும் கருவி, ட்ரோன் மூலம் பூச்சி மருந்து தெளிக்கும் இயந்திரம் காட்சிப்படுத்தப்பட்டது. புவியியல் நிலத்தடி நீர் ஆய்வுக்கருவிக்கு, உழவன் செயலியில் பதிவு செய்து ரூ. 500 கட்டணம் செலுத்தி நிலத்தடி நீர் ஆதாரம் குறித்து தெரிந்து கொள்ளலாம் என்றார்.வேளாண் இணை இயக்குநர் ஈஸ்வர், தோட்டக்கலைத்துறை துணை இயக்குநர் அன்பழகன், வேளாண் பொறியியல் துறை செயற்பொறியாளர் சுமதி உட்பட பலர் கலந்துகொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ