உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / வட்டார அளவிலான செஸ் போட்டி

வட்டார அளவிலான செஸ் போட்டி

விக்கிரவாண்டி விக்கிரவாண்டி அடுத்த பனையபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் வட்டார அளவிலான செஸ் போட்டி நடந்தது.மாவட்ட பள்ளிக் கல்வித்துறை மற்றும் விழுப்புரம் சென்ட்ரல் அரிமா சங்கம் சார்பில் பள்ளி வளாகத்தில் நடந்த போட்டிக்கு தலைமை ஆசிரியர் சுந்தர வடிவேல் தலைமை தாங்கினார். ஊராட்சி தலைவர் காந்த ரூபி வேல்முருகன், துணைத் தலைவர் கலா முருகன், வட்டார தலைவர் ராமச்சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தார். உடற்கல்வி ஆசிரியர் மணிகண்டன் வரவேற்றார். அரிமா சங்க தலைவர் கோபிநாத் மாணவர்களுக்கான செஸ் போட்டியை துவக்கி வைத்தார். போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கினர்.அரிமா சங்க செயலாளர் சவுந்தர பாண்டியன், பொருளாளர் குமார், துணைத் தலைவர்கள் பாபு மணிகண்டன், வட்டார அளவிலான அரசு பள்ளி மாணவர்கள் ஆசிரியர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை