மேலும் செய்திகள்
மாவட்ட ஊஷூ போட்டி மாணவர்கள் பங்கேற்பு
31-Mar-2025
விழுப்புரம்: விழுப்புரம் மாவட்ட சிலம்பாட்ட கழகம் சார்பில், மாவட்ட அளவிலான சிலம்பாட்ட போட்டிகள் நேற்று நடந்தன.விழுப்புரம் வி.ஆர்.பி., பள்ளி மைதானத்தில் நடந்த போட்டியை தமிழ்நாடு சிலம்பாட்ட கழக மாநில தலைவர் முத்துராமன் தொடங்கி வைத்தார். மாவட்ட செயலாளர் கல்பனா வரவேற்றார். முதுநிலை சிலம்பாட்ட பயிற்றுனர் குணசேகரன், இணை செயலாளர் ஜலேந்திரன், வேப்பூர் திருமடம் தங்கதுரை சுவாமிகள், கடலூர் மாவட்ட செயலர் ரகுநாத் முன்னிலை வகித்தனர். சேலம் உதயகுமார், திருப்பூர் சுமதி போட்டி நடுவர்களாக பங்கேற்றனர்.மினி சப் ஜூனியர், சப் ஜூனியர், ஜூனியர், சீனியர், சூப்பர் சீனியர் என, 10 முதல் 14 ,17, 19, 30 வயதுக்கு கீழ் உள்ள, ஆண்கள், பெண்கள் என தனித்தனியாக போட்டிகள் நடந்தன. ஒற்றை கம்பு, இரட்டை கம்பு, ஆயுத விளையாட்டு உள்ளிட்ட பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்பட்டன. இதில் 300க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனர்.போட்டியில் வென்றவர்களுக்கு பதக்கம், சான்றிதழ் வழங்கப்பட்டது. பயிற்றுனர்கள் சந்தோஷ்குமார், ஆஷா, சாந்தி, மீனாட்சி, ராஜேஷ், ஏழுமலை, தைரியலட்சுமி உள்ளிட்ட குழுவினர் பங்கேற்றனர்.
31-Mar-2025