பால்பாண்டியன் பாத்திரக்கடையில் தீபாவளி சிறப்பு தள்ளுபடி விற்பனை
திண்டிவனம், : திண்டிவனம், பால்பாண்டியன் பாத்திரக்கடையில் தீபாவளியை முன்னிட்டு சிறப்பு தள்ளுபடி விற்பனை நடக்கிறது. திண்டிவனம் நேரு வீதியில், பால்பாண்டியன் பாத்திரக்கடை கடந்த, 55 ஆண்டுகளாக மக்களின் பேராதரவுடன் செயல்பட்டு வருகின்றது. மூன்றாம் தலைமுறையாக, கைராசி கடையாக நேரு வீதியில் உள்ள பால்பாண்டியன் பாத்திரக்கடையில் பாத்திரம், பர்னிச்சர்ஸ் உள்ளிட்ட பொருட்களும், காமாட்சியம்மன் கோவில் வீதியில் உள்ள பால்பாண்டியன் எலக்ட்ரானிக்ஸ் மற்றும் ேஹாம் அப்ளையன்சில், பொருட்களும் விற்பனை செய்யப்படுகின்றது. வரும் 20ம் தேதி தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, பாத்திரக்கடையில், அனைத்து பொருட்களும் சிறப்பு தள்ளுபடியில் விற்பனை செய்யப்படுகின்றது. குறிப்பாக, பட்டர் பிளை 2 லிட்டர் கிரைண்டர் மற்றும் சவுபாக்கியா மிக்ஸி ஆகியவை ரூ.5999 மட்டுமே. இதனுடன் கிராம்டன் ஜன் பாக்ஸ் இலவசமாக வழங்கப்படுகின்றது. தீபாவளியை முன்னிட்டு வாடிக்கையாளர்கள் வாங்கும் அனைத்து பொருட்களுக்கும் சிறப்பு பரிசு வழங்கப்படுகின்றது. அனைத்து பொருட்களும் வீட்டிற்கே சென்று டோர் டெலிவரி செய்யப்படும். இதேபோல் பிரீத்தி கிரவுன் மிக்ஸி, பிரீத்தி லெவண்டர் கிரைண்டர் வாங்குபவர்களுக்கு, சிறப்பு தள்ளுபடி வழங்கப்படுகின்றது. இதேபோல் தீபாவளி பண்டிகை வரை, திருமண சீர்வரிசை உள்ளிட்ட பொருட்கள் மொத்தமாக வாங்குபவர்களுக்கு சிறப்பு தள்ளுபடியாக அதிக பட்சமாக 50 சதவீதம் வரை வழங்கப்படும். கல்யாண சீர்வரிசை பாத்திரங்களுக்கு தீபாவளி சிறப்பு தள்ளுபடியில் வாடிக்கையாளர்கள் அனைத்து பொருட்களையும் வாங்கி பயன்பெறுமாறு, உரிமையாளர் பால்பாண்டியன் ரமேஷ் தெரிவித்துள்ளார்.