உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / அஸ்வின்ஸ் விழுப்புரம் கிளையில் தீபாவளி சிறப்பு விற்பனை துவக்கம்

அஸ்வின்ஸ் விழுப்புரம் கிளையில் தீபாவளி சிறப்பு விற்பனை துவக்கம்

விழுப்புரம் : விழுப்புரம் அஸ்வின்'ஸ் கிளையில் தீபாவளி சிறப்பு விற்பனை துவக்க விழா நடைபெற்றது. விழுப்புரம்-திருச்சி மெயின் ரோடு, உட்லண்ட்ஸ் ஹோட்டல் அருகே உள்ள அஸ்வின்'ஸ் சுவீட்ஸ் நிறுவனத்தில், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சிறப்பு விற்பனை துவக்க விழா நடைபெற்றது. முதல் விற்பனையை சேம்பர் ஆப் காமர்ஸ் துணை தலைவர் வெங்கடேசன் துவக்கி வைத்தார். தொழிலதிபர் கோபி பெற்றுக் கொண்டார். முண்டியம்பாக்கம் முன்னாள் ஊராட்சி தலைவர் ராஜவேலு, கிளை நிர்வாகி வடிவுக்கரசி முரளிதரன், அஸ்வின்'ஸ் விழுப்புரம் கிளை பொறுப்பாளர் முரளிதரன் ஆகியோர் கூறியதாவது : பெரம்பலுாரை தலைமை இடமாக கொண்டு செயல்படும் அஸ்வின்'ஸ் சுவீட்ஸ் அண்ட் பேக்கரி, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 25க்கும் மேற்பட்ட கிளைகளைக் கொண்டுள்ளது. விழுப்புரம் அஸ்வின்'ஸ் சுவீட்ஸ் அண்ட் பேக்கரி சார்பில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, சுவையான இனிப்புகள், பட்சணங்கள் விற்பனை செய்யப்படுகிறது. இங்கு, இனிப்புகள் கிளாசிக் தீபாவளி கிப்ட் பேக் ரூ. 450, பலகார கிப்ட் பேக் 499, டிலைட் கிப்ட் பேக் 900, வி.ஐ.பி., டின் 1000, ரூபாய் பிரீமியம் தீபாவளி பாக்ஸ் 1250 ரூபாய்க்கு கிடைக்கும். தவிர அசார்டட் சுவீட்ஸ், காஜு பக்லவாஸ், நெய் இனிப்புகள், சினாக்ஸ் மற்றும் சேவ்ரீஸ் ஆகியவை தனித்தனியே கிடைக்கிறது. மேலும் தட்டை, அச்சு முறுக்கு, மிக்சர், காரா சேவு, காரா பூந்தி மற்றும் அனைத்து கார வகைகளும், பாரம்பரிய முறையில் தயாரித்து வழங்கப்படுகிறது. தமிழ் டிரெடிஷனல் சுவீட்ஸ், அரேபியன் சுவீட்ஸ், பெங்காலி சுவீட்ஸ் முந்திரி சுவீட்ஸ் மற்றும் அல்வா வகைகள் விற்பனை செய்யப்படுகிறது. தீபாவளி பண்டிகை இனிப்புகள் ஆர்டரின் பேரில், சிறப்பான முறையில் சப்ளை செய்கிறோம். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ